Friday, 8 July 2016


சென்னை விமான நிலையத்தில் விமான டயர் வெடித்து விபத்து:6 பேர் உயிர் தப்பினர்



சென்னை விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் புதன்கிழமை (ஜூலை 6) இரவு தரையிறங்கும்போது திடீரென டயர் வெடித்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
பெங்களூரில் இருந்து புதன்கிழமை இரவு 8 மணிக்கு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சென்னை வந்தது. அந்த விமானத்தில் அந்த தனியார் நிறுவன அதிகாரிகள் 4 பேர், விமானப் பணியாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேர் பயணம் செய்தனர்.
அந்த விமானம் தரையிறங்கும்போது சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக அதன் முன்பக்க டயர் வெடித்தது. இதில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதன் முன்பகுதி (மூக்குப் பகுதி) தரையில் மோதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தை அடுத்து விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து விமானத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து முதல் விமான ஓடுதளம் மூடப்பட்டது.
ஓடுதளம் மூடப்பட்டதால் இரண்டாவது ஓடுதளம் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டன. இதனால் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
விமான ஓடுதளம் சேதமடைந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

No comments:

Post a Comment